நாம் செல்போன் தொலைந்தவுடன் போனை கண்டு பிடிக்கும் வழிமுறைகளை ஆறாயவேண்டும். அதற்கு முன்பாக யாரும் அதை தகாத காரியங்களுக்கு பயன்படுத்தாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகள்
முதலில் உங்கள் போனுக்கு ரிங் அல்லது டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பவும். யாரிடமாவது உங்கள் போன் இருந்தால் அவர்கள் உங்களுக்கு தொடர்பு கொள்வார்கள் இல்லையென்றால் அடுத்த முயற்சிக்கு செல்லவும்.
உங்கள் போன் தொலைந்துவிட்டால் உடனே உங்கள் கணினியில் உள்ள அனைத்து கடவுச் சொல்லையும் மாற்றிவிடவும். நம்மில் பலர் இமெயில், முகநூல், வங்கி கணக்கு போன்றவற்றின் கடவுச்சொற்களை மொபைலில் சேமித்து வைக்கும் பழக்கத்தில் இருப்போம். ஆகவே உடனே அவைகளின் கடவுச் சொல்லையும் மாற்றி விடுவது நல்லது.
ஆண்ட்ராய்ட் டிவைஸ் மேனேஜரின் உதவியுடன் உங்களை போனை கண்டுபிடிக்க முடியும். இதில் ரிங், லாக் அல்லது போனை செயலற்று போக செய்வதற்கான ஆப்ஷன்கள் உள்ளன. இதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி உங்கள் போனை கண்டுபிடிக்கலாம், இல்லாவிட்டால் செயலற்று போக செய்யலாம். குறிப்பு இந்த ஆப்ஷன் கருவி தொலைந்து போகும் முன் நீங்கள் எனேபிள் செய்திருந்தால் மட்டுமே வேலை செய்யும்.
போன் தொலைந்தவுடன் உங்கள் டெலிகாம் ஆப்ரேட்டரை தொடர்பு கொண்டு உங்கள் சிம் கார்டை பிளாக் செய்யவும். இதனால் உங்கள் போனை எடுத்தவர்கள் உங்கள் சிம் கார்டை பயன்படுத்த முடியாது. இதன் மூலம் உங்கள் சிம் கார்டை தகாத செயல்களுக்கு பயன்படுத்தப்படாமல் பாதுகாக்க முடியும்.
போனை கண்டுபிடிக்க காவல் நிலையம் செல்வதால் ஒரு பயனும் இல்லையென்றாலும் அதை செய்வது நல்லது. உங்கள் போனை கண்டுபிடிக்க முடியாவிட்டால் உடனே அருகில் உள்ள காவல் நிலையம் சென்று புகாரை பதிவு செய்தல் அவசியம்.
உங்கள் மின்னஞ்சல், முகநூல், சமூக வலைதளம் போன்றவற்றின் கணக்குகளை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். இதனால் யாராவது உங்கள் கணக்குகளை பார்வையிடுகின்றார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...