Loading...
Wednesday, 2 March 2016

நம் உடலில் ஏற்படும் மாற்றத்திற்கான அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்..!!

நம் உடம்பு ஒரு வித்தியாசமான அமைப்புடையது. எங்கோ ஓரிடத்தில் நோய் இருக்கும். அதற்கான அறிகுறி எங்கேயோ தென்படும். நம் உடம்பில் மறைந்திருக்கும் அந்த மாதிரியான அறிகுறிகள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

* உங்கள் சருமம் சுத்தமாகவும் அரிப்பில்லாமலும் இருக்கலாம். ஆனால், உங்களுக்கு பாதவலியோ, குதிகால் வலியோ இருக்கும் பட்சத்தில் அது சோரியாஸிஸ் வாதமாக இருக்கலாம். ‘கை, கால் விரல்களில் ஏற்படும் வீக்கம் சோரியாஸிஸ் வாதத்தின் அறிகுறியாக இருக்கலாம்’ என்று தேசிய சோரியாஸிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

* அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறதா? அது சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம். சர்க்கரை நோயாளிகளின் உடம்பில் இருக்கும் ரத்த சர்க்கரையை நிர்வகிக்க கிட்னி போராட்டம் நடத்தும் போது அதை சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடுகிறது. அதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி இருக்கிறது.

* ‘ஐஸ்கட்டிகளை பார்த்தால் உங்களுக்கு வாய் ஊறுகிறதா? உங்களுக்கு ரத்த சோகையாக இருக்கலாம்’ என அமெரிக்க மருத்துவ இதழின் ஆய்வு தெரிவித்துள்ளது. தொண்டைவலி மற்றும் வீக்கம் கூட ரத்தசோகையின் அறிகுறியாக இருக்கலாம்.

* ‘நாக்கில் உலக வரைபடம் போல கண்ட வடிவில் வெள்ளை திட்டுகள் இருந்தால் அது ‘சீலீயாக்’ நோயின் அறிகுறியாக இருக்கலாம். அதனால் உங்கள் நாக்கில் ஏற்படும் இந்த வித்தியாசத்தை உதாசீனப்படுத்தாதீர்கள்’ என்கிறது இத்தாலியன் ஆய்வு ஒன்று.

* 48 மணி நேரத்துக்கு பிறகும் உங்கள் விக்கல் நிற்காமல் தொடருமானால் கேன்சரின் அறிகுறியாக இருக்கலாம். நரம்பு மண்டலம் தான் விக்கலை கட்டுப்படுத்தும். கேன்சர் அதனை பாதிக்கும் போது இத்தகைய பிரச்சனை ஏற்படும்.

* ‘குளிர்காலத்தில் குளிர்ச்சியை அடிக்கடி உணர்வீர்கள். கடும் வெயில் காலத்தில் உங்கள் உடம்பில் குளிரும் தன்மையை உணர்ந்தால் அது தைராய்டின் அறிகுறியாக இருக்கலாம்’ என்கிறது தெற்கு இல்லினாயிஸ் பல்கலைக்கழகம்.

* சருமத்துக்குக் கீழே ஏற்படும் கட்டிகள் ஆர்த்ரைட்டிஸின் முதல் அறிகுறியாக இருக்கலாம் என்கிறது ஆய்வு ஒன்று. திசுக்களால் உருவாகி வால்நட் அளவுக்கு பெரிய அளவில் உங்கள் கை, கால் முட்டிகளுக்கு அருகில் உருவாகி இருந்தால் அலெர்ட் ஆகுங்கள்.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP