டிப்ஸ்... டிப்ஸ்...டிப்ஸ்... டிப்ஸ்...!
............................................................
ஃப்ரிட்ஜை சோப்புநீர் போட்டு சுத்தப்படுத்தக் கூடாது.
ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கால் ஸ்பூன் சமையல் சோடாவை சேர்த்து, ஒரு மூடி எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். இதை சிறிய துணியால் தொட்டு ஃப்ரிட்ஜை துடைக்கவும்.
பிறகு நல்ல, துணியால் ஈரம் போக துடைத்தால்.. ஃப்ரிட்ஜ் `பளிச்’சென்று இருக்கும்.
கோடைகாலத்தில் எறும்புகள் வருவது அதிகம். உணவுப் பண்டங்களை சமையல் மேடையில் வைக்கும்போது, அவற்றைச் சுற்றி இடை வெளி இல்லாமல், மஞ்சள் பொடியைத் தூவி வைத்தால், எறும்புகளிலிருந்து காத்துக் கொள்ளலாம்.
வெயில் காலத்தில் மோர் விரைவில் புளித்துவிடும். அப்படிப் புளிக்காமல் இருக்க, வாழை இலையைச் சிறுசிறு துண்டுகளாக்கி மோரில் போட்டு வைத்து, மோரை உபயோகிக்கும்போது எடுத்துவிட வேண்டும்.
கேரட் அல்வா செய்யும்போது, சிறிதளவு பால் கோவாவையும் சேர்த்துக் கிளறி, கடைசியில் பாதாம் எசென்ஸ் மிகவும் சிறிதளவு விட்டு இறக்கினால்... சுவையும், மணமும் அள்ளும்!
குலோப் ஜாமூன் பாகில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு இறக்கினால், பாகு உறையாமலும் நீண்ட நேரம் கெடாமலும் இருப்பதுடன், சுவையும் கூடுதலாகும்.
பூரிக்கு மாவு தயாரிக்கும்போது... ஒரு கப் மாவுக்கு, ஒரு ஸ்பூன் வீதம் ரவை கலந்தால், பூரி உப்பலாக வரும்.
பஜ்ஜி, வடை, வடகம், பட்சணம் செய்யும் எண்ணெயில் ஒரு சிறிய துண்டு இஞ்சியைத் தட்டிப் போடுங்கள். இது வயிற்றுக்கு நல்லது. பொரித்த பண்டங்களும் மணமாக இருக்கும்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...