Loading...
Wednesday, 17 August 2016

குழந்தையுடன் அதிக நேரம் பேசுங்க

   
   உங்கள் குட்டிக்கு நீங்கள் தான் ரோல் மாடல், எல்லா செயல்பாடுகளும் வீட்டில் உள்ள பெரியவர்களை அல்லது அண்ணா, அக்கா ஆகியோரிடமிருந்து குழந்தைக்கு பழக்கமாகிவிடும்.

குழந்தை வளர வளர நீங்களும் வளர்கிறீர்கள். புதிதாக பல திறன்களை நீங்கள் பெறுகிறீர்கள். புதிதாகப் படிப்பது போல். தவறுகள் ஏற்படலாம். திருத்திக் கொண்டு குழந்தையை அணுகலாம்.

குழந்தையுடன் நாம் பேசுவதற்கான சில டிப்ஸ்...

* குழந்தை பேசும் போது கூர்ந்து கவனியுங்கள். குழந்தை பேச ஆரம்பித்தால் நீங்கள் பேசுவதை நிறுத்திவிடுங்கள்.

* நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அடிக்கடி அரை மணிக்கு ஒரு முறை 2 -3 நிமிடங்கள் பேசுங்கள். 1 மணி நேரத்திற்கு ஒரு முறையாவது கட்டாயம் பேசுங்கள். ப்ளீஸ்!

* முடியாது என்றும் வேண்டாம் என்றும் தலையைத் திருப்பும் குழந்தையை அடிக்க வேண்டாம். கட்டாயப்படுத்த வேண்டாம். பொறுமையாகச் சமாளிக்க வேண்டும்.

* சோர்வின்றி ஓடிக் கொண்டே வளரும் குழந்தைக்கு ஈடுகொடுக்க பொற்றோரின் சிறந்த உடல் மற்றும் மனநலம் பராமரிக்கப்படவேண்டும்.

* உங்கள் கோபத்தை குழந்தையிடம் காட்டக்கூடாது. உங்கள் மனம் அமைதிப்படும்வரை உங்கள் சின்னக் குட்டியிடம் வராதீர்கள்.

* உங்கள் குழந்தையுடன் சேர்ந்து நீங்களும் விளையாடினால் குழந்தை மகிழ்ச்சியின் எல்லைக்குப் போகும்.

* எது செய்யக்கூடாது என்பதை விட எது செய்ய வேண்டும் என்பதைப் புரிய வையுங்கள்.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP