Loading...
Wednesday, 18 May 2016

வீட்டுல கெட்ட நாற்றம் வருதா? இதோ சூப்பர் டிப்ஸ்...

அனைவருக்குமே வீடு நன்கு சுத்தமாக, எந்த ஒரு கெட்ட நாற்றமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று விரும்புவோம்.

சொல்லப்போனால், நாம் எவ்வாறு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்கிறோமோ, அதை வைத்தே நாம் எப்படி என்று சொல்லாம் என்று முன்னோர்கள் சொல்வார்கள்.

அத்தகைய சுத்தத்தை நமது வீட்டில் இருக்கும் கிச்சன் மற்றும் பாத் ரூம் மட்டும் தான் கெடுக்கும்.

அதிலும் எங்கேனும் ஊருக்கு சென்று விட்டு, வீட்டிற்கு வந்தால், அப்போது வரும் துர்நாற்றத்தைத் தாங்க முடியாது.

ஆகவே அத்தகைய எந்த ஒரு நாற்றமும் வீட்டிலிருந்து வராமல் இருக்க ஒரு சில சூப்பர் டிப்ஸ் இருக்கிறது.

இது என்னவென்று படித்து தெரிந்து வீட்டை நறுமணத்துடன், சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

* தினமும் வீட்டில் சேரும் குப்பைகளை அவ்வப்போது தூக்கிப் போட்டு விட வேண்டும். ஒரு நாள் அவற்றை மறந்தாலும், பின் வீடே நாற்றத்தில் மூழ்கிவிடும்.

* வீட்டில் பயன்படுத்தும் குப்பைத் தொட்டிகள் எப்போது மூடியிருக்க வேண்டும். அதிலும் அந்த தொட்டிகள் கிச்சன், பாத் ரூம் அல்லது ஹால் என்று எங்கு இருக்கிறது என்பது முக்கியமில்லை, அது மூடியிருக்கிறதா என்பது தான் முக்கியம். இல்லையெனில் அதிலிருந்து நாற்றம் வரும்.

* அணியும் உடைகளை எப்போதும் அழுக்குப் பை அல்லது கூடையில் போட வேண்டும். அதிலும் மூடி போட்டதாகவோ அல்லது ஜிப் உள்ளதாகவோ இருக்க வேண்டும். இல்லையெனில் துணியில் இருந்து வரும் வியர்வை வாசனை, வீட்டிலேயே சுற்றிக் கொண்டிருக்கும்.

* வீட்டில் சமைக்கும் உணவுகளை திறந்த படியே வைக்க கூடாது. எப்போது சமைத்தாலும், அந்த உணவுகளை மறக்காமல் மூடி வைக்க வேண்டும். இல்லையெனில் சமைக்கும் போது, வீட்டில் சுற்றிக் கொண்டிருக்கும் காற்றை வெளியேற்றும் எக்ஸாஸ்ட் ஃபேன் போட்டு விட வேண்டும்.

* பாத்ரூம் எப்போதும் அதிக ஈரத்துடனோ அல்லது நீர் தேக்கத்துடனோ இருந்தால், அது நாற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே அப்போது அதனை மாப் வைத்து துடைத்து விட்டு, பின் ஏதேனும் ஏர் ஃப்ரஸ்னரை அடித்துவிட வேண்டும்.

* சமைத்து முடித்ததும் மறக்காமல் சமயலறையை துடைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த பொருட்களின் வாசனைக்கு பூச்சிகள் வந்துவிடும். பின் அந்த பூச்சிகள் வீட்டிலேயே தங்கிவிடும். பின் அதனால் நாற்றம் அதிகம் வரும்.

* வீட்டை துடைக்கும் போது, நீரில் பினாயில் அல்லது மற்ற நீர்மத்தை கலந்து துடைப்பதைவிட, ஏதேனும் வாசனை மிகுந்த எலுமிச்சை வாசனை உள்ளதை வாங்கி, ஊற்றி பயன்படுத்தினால், சூப்பராக இருக்கும்.

* எப்போதும் வீட்டில் இருக்கும் பாத்ரூமை பயன்படுத்தியதும், மூடி விட வேண்டும். இதனால் கழிவறையிலிருந்து வரும் நாற்றம் வீட்டில் பரவுவதைத் தடுக்கலாம்.

* வீட்டில் உள்ள நாற்றத்தை போக்க சிறந்த வழி என்னவென்றால், வீட்டில் சூரிய வெளிச்சம் படுவது தான். ஏனெனில் அந்த வெளிச்சம் வீட்டில் படுவதால், எந்த ஒரு நாற்றமும் வீட்டில் இருக்காது.

மேலும் வீட்டில் உள்ள ஜன்னல்களை காலை வேளையில் திறந்து வைப்பது நல்லது.

இவற்றையெல்லாம் பின்பற்றி வந்தால், வீட்டிலிருந்து வரும் துர்நாற்றத்தை தடுக்கலாம்.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP