Loading...
Tuesday, 3 May 2016

வெந்தயக்கீரை மீன் குழம்பு செய்வது எப்படி..

வெந்தயக்கீரையை மீன் குழம்புடன் சேர்த்து சமைக்கும் போது, மீன் குழம்பின் சுவை அதிகரிப்பதோடு, உப்பு, புளி, காரம் சரியான பக்குவத்தில் சேர்த்தால் கீரையின் கசப்புத்தன்மையே தெரியாமல் குழந்தைகள் கூட சாப்பிட்டு விடுவார்கள்!

தேவையான பொருட்கள் :

வஞ்சிரமீன் - 1/2 கிலோ
வெங்காயம் 200 கிராம்
தக்காளி - 350 கிராம்
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் 2 டீ ஸ்பூன்
தனியாத்தூள் 2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள், சீரகத்தூள் தலா - 1/2  டீ ஸ்பூன்
உப்பு - ருசிக்கு தேவையான அளவு
வெந்தயக்கீரை சிறிய கட்டு - 1
புளி - எலுமிச்சை அளவு

தாளிக்க :
 
நல்லெண்ணை - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு, சீரகம், சோம்பு, மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 6 பெரிய பல்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
தேங்காய் பத்தை - 4 பத்தை
கொத்தமல்லி தழை - அரை கைப்பிடி

செய்முறை :

* மீனை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக போடவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* தேங்காயை நைசாக அரைத்து கொள்ளவும்.

* வெந்தய கீரையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.

* தக்காளியை நைசாக அரைத்து வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து தாளித்து, பூண்டை தட்டி போட்டு வதக்கி, கருவேப்பிலை சேர்த்து, 2 நிமிடம் வதக்கவும்.

* அடுத்து அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் வதங்கியதும் எல்லா மசாலா தூள் வகைகள், வெந்தயக்கீரை போட்டு நன்கு 2 நிமிடம் வதக்கவும்.

* மசாலா எல்லாம் பச்சை வாசனை போனவுடன் அரைத்த தக்காளியை சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.

* பிறகு புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.

* கடைசியாக மீனையும், அரைத்த தேங்காயையும் சேர்த்து 20 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

* குழம்பு பக்குவம் வந்தவுடன் கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.

* சுவையான மணமான மருத்துவ குணம் நிறைந்த மேத்தி மீன் குழம்பு ரெடி.

குறிப்பு: வெந்தயமும், நல்லெண்ணையும் சேருவதால் வயிற்றுக்கு எந்த உபாதையும் அளிக்காது. உடல் சூட்டை தணிக்கும் குழம்பு. ப்ளெயின் ரைஸ், ரொட்டி, தோசை, ஆப்பம், குஸ்கா, அனைத்துக்கும் பொருந்தும்.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP