மிகவும் சுவையான சம்பா கோதுமை வெஜிடபிள் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சம்பா கோதுமை - 1 கப்,
வெங்காயம், தக்காளி - தலா 1,
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி - சிறிதளவு,
பட்டை - 1
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
பெருஞ்சீரகம் - அரை ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2,
பிரியாணி மசாலா - கால் ஸ்பூன்
உப்பு,
நெய் - தேவையான அளவு.
பச்சைமிளகாய் - 2
கொத்தமல்லி, புதினா - சிறிதளவு
செய்முறை:
* வெங்காயம், தக்காளி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சம்பா கோதுமையை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.
* வாணலியில் நெய் ஊற்றி, சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதில் இஞ்சி, பூண்டு விழுது, சேர்த்து பச்சை வாசனை போன நன்றாக வதக்கிய பின் தக்காளி, பச்சைமிளகாயைக் கீறிப் போட்டு வதக்க வேண்டும்.
* ஓரளவுக்கு வதங்கிய பின், நறுக்கிய காய்கறிகள், உப்பு சேர்த்து வதக்கி, பிரியாணி மசாலா சேர்க்க வேண்டும்.
* காய்கறிகள் பாதியளவு வதங்கியவுடன் ஒரு கிளாஸ் சம்பா கோதுமைக்கு, மூன்று கிளாஸ் நீர் எனச் சேர்த்து, கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள சம்பா கோதுமையை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி வைக்கவும்.
* தண்ணீர் நன்றாக வற்றி வரும் போது கொத்தமல்லி, புதினாவை போட்டு இறக்கவும்
* சுவையான சத்தான சம்பா கோதுமை வெஜிடபிள் பிரியாணி ரெடி.
பலன்கள்:
ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க உதவும். வாரத்தில் இரு நாட்கள் சாப்பிட்டுவர, நல்ல பலன் தெரியும். டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரக்க உதவும். தேவையற்ற கொழுப்பு கரையும். இதய நோயாளிகளுக்கு நல்லது
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...