தானிய வகைகளில் ஒன்றானது சோளம். சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்ல சிறந்த இயற்கை உணவாகும்..
இது உடல் பருமனைக் குறைக்கும், வயிற்றுப்புண்ணை ஆற்றும், வாய் நாற்றத்தைப் போக்கும். அதிகளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கொழுப்பு சத்துக்களை கொண்டுள்ள சோளம் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தவிர்த்து, செரிமானத்திற்கும் உதவி புரிகிறது.
சம அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகளை கொண்டுள்ள மக்காச்சோளத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கும்.
இயற்கை உணவான சோளம் நீரிழிவு ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது. கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் நிறைந்து காணப்படுவதால் மனஅழுத்தத்தை தடுக்கிறது.
மஞ்சள் நிற கர்னல்களை கொண்ட சோளம் குரல்வளைவில் ஏற்படக்கூடிய நோய் அபாயத்தை தவிர்க்கிறது, மேலும் பார்வைக்கோளாறு ஏற்படாமல் கண்களை பாதுகாக்கிறது.
கர்ப்பிணிபெண்களுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் சோளமும் ஒன்று. கர்ப்பிணிபெண்கள் தங்களின் வழக்கமான உணவாக சோளத்தை உட்கொள்ள வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.
சோளம் குறைந்த அளவு கொழுப்பினை கொண்டுள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக இருப்பதோடு, இதயம் சம்பந்தபட்ட நோய்களையும் எதிர்க்க உதவிபுரிகிறது.
சோளமாவாவை அழகு, சமையலுக்கு பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தோல் தடித்தல், எரிச்சல் ஏற்படக்கூடிய இடத்தில் பயன்படுத்தினால் தோல் சம்பந்தபட்ட பிரச்சனைகளை சரிசெய்யலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு. கண் குறைபாடுகளை சீர் செய்யும் 'பீட்டா கரோட்டின்', இதில் அதிகமாக உள்ளது. மூல நோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது....
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...