தேவையானவை:
ஸ்ட்ராபெர்ரி – 200 கிராம்,
திராட்சை – 50 கிராம்,
தேன் – சிறிதளவு.
செய்முறை:
ஸ்ட்ராபெர்ரி மற்றும் திராட்சைப் பழத்தை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து, தேன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும்.
குளிர்ச்சிக்காக, சிறிது ஐஸ் கட்டிகள் சேர்த்துக்கொள்ளலாம்.
பலன்கள் :
* திராட்சை, ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள், புற்றுநோய் செல்களைத் தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களான, அன்தோசயனின் (Anthocyanin) மற்றும் எல்லாஜிக் அமிலம் (Ellagic Acid) இதில் அதிக அளவு உள்ளன.
* நியாசின், ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளேவின் முதலான வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சத்துக்களும் இதில் அதிக அளவு இருக்கின்றன.
* மாங்கனீஸ், பொட்டாசியம், மக்னீசியம், துத்தநாகம், கால்சியம் ஆகிய தாதுஉப்புகள் ஓரளவு கிடைக்கும்.
* தொடர்ந்து சீரான இடைவேளைகளில் இந்த ஜூஸ் குடித்துவந்தால், இதய நோய்கள் வராது. இளமைப் பொலிவு கிடைக்கும்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...