வீட்டு வேலையில் மூழ்கி காணப்படும் குடும்ப தலைவிகளுக்கு ஒரு வரபிரசாதம் பிரிட்ஜ் எனப்படும் ரெப்ரிஜிரேட்டர். அரைத்த மாவு முதல் காய்கறிகள் வரை பல நாட்கள் பக்குவமாக வைத்திருந்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.
உணவு பொருட்களை ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் தொடர்ந்து வைத்திருப்பதின் மூலம் அவை கெட்டுபோகாமல் பாதுகாக்க முடியும். ஆனால் உணவு பொருட்களை பாதுகாப்புடன் பிரிஜ்ஜில் வைப்பதிலும், எடுப்பதிலும் பல்வேறு முறைகளை கண்டிப்பாக கையாள வேண்டும்.
ஒரு டிகிரி செல்சியசுக்கும் 5 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்ட வெப்பநிலையில் பிரிட்ஜ் செயல்படுகிறது. ஐந்து டிகிரிக்கு மேல் அதிகரித்தால் பிரிஜ்ஜில் பாக்டீரியாக்கள் பெருகவும், வைக்கப்பட்டுள்ள உணவு கெட்டுப்போகவும் வாய்ப்பு உள்ளது. சரியான வெப்ப நிலையை போன்று பாதுகாப்பும் முக்கியம். பாதுகாப்புடன் ரெப்ரிஜிரேட்டரை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
* ஒவ்வொரு சிறிய விஷயங்களுக்காகவும் அடிக்கடி பிரிட்ஜை திறக்க கூடாது. அறையில் உள்ள வெப்பநிலை பிரிட்ஜ்க்குள் கடக்க கூடும். எனவே பிரிட்ஜ்க்குள் வைத்திருக்கும் பொருட்களை எடுக்கும்போது ஒட்டுமொத்தமாகவும், வேகமாகவும் எடுக்க வேண்டும். இதற்கு முன்னேற்பாடாக பொருட்களை ஒழுங்காக அடுக்கி எளிதாக எடுக்கின்ற வகையில் முன்கூட்டியே வைத்திருக்க வேண்டும்.
* பிரிட்ஜில் அதிக குளிர் உள்ள பிரதேசம் பிரீசருக்கு கீழ் உள்ள அறை ஆகும். குளிர் குறைவான பகுதி அடிப்பகுதியில் உள்ள அறை மற்றும் டோரில் உள்ள அறைகள் ஆகும். இதனை கருத்தில் கொண்டு பொருட்களை வைக்க வேண்டும்.
* ஒரே ரீதியில் உள்ள பொருட்களை ஒரே அறையில் அடுத்தடுத்து வைக்கலாம். வெண்ணெய், தயிர் போன்றவற்றை டோரில் உள்ள மேல் பகுதி அறையில் வைக்கலாம். சமைத்த உணவு, மீதி வந்த உணவு போன்றவற்றை நடுவில் உள்ள செல்பில் வைக்கலாம்.
* வேக வைக்காத இறைச்சி, மீன் போன்றவற்றை பிரீசரில் வைக்க வேண்டும். முட்டை டிரே நடுவில் உள்ள ஷெல்பில் வைக்கலாம். காய்கறிகள் அடிப்பகுதியில் உள்ள காய்கறிகளுக்கான டிரேயில் வைக்கலாம்.
* விரைவில் பயன்படுத்தி தீர்க்கும் நிலையில் உள்ள குளிர்பானங்கள், பிரிட்ஜின் டோர் தட்டுகளில் வைப்பது நல்லது. பிரிட்ஜ் நிறைய பொருட்களை அடைத்து வைப்பதும் மோசமான வாயுக்கள் உற்பத்தியாக வழிவகுத்துவிடும்.
* சமைத்த உணவு பொருட்களை பிரிட்ஜில் வைக்கும்போது அவற்றை தடிமன் குறைந்த சிறு சிறு பாத்திரங்களில் வைக்க வேண்டும். எளிதில் குளிரச்செய்ய முடியும், எடுக்கும்போது வீணாகாமலும் தவிர்க்க முடியும்.
* சூடான உணவுகளை சூடு ஆறிய பின்னர் வைக்க வேண்டும். சூடாகஇருந்தால் பிரிட்ஜின் வெப்பநிலையில் மாறுபாட்டை ஏற்படுத்தி மோசமான வாயுக்கள் உற்பத்தியாக காரணமாகிவிடும். அதற்காக காலையில் சமைத்த உணவுகளை இரவு பிரிட்ஜில் வைப்பதும் தவறு.
* பிரிட்ஜில் வைத்த உணவுகளை திரும்ப பயன்படுத்தும்போது 70 டிகிரி வெப்பநிலை வரை 2 நிமிடம் சூடாக்கி பயன்படுத்துவது நல்லது.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...