Loading...
Friday, 8 April 2016

கருவில் உள்ள குழந்தையை காக்கும் ஆப்பிள்...!!

கர்ப்பகாலத்தில் பழங்கள், மீன், முட்டை, போன்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அதிகமான  கர்ப்பிணிபெண்கள் ஆரோக்கியமான உணவை உட்கொண்டால் எடை பிரச்சனை ஏற்படக்கூடும் என பயப்படுகின்றனர். ஆனால் நீங்கள் தினமும்  உட்கொள்ளும் உணவில் ஆப்பிள் பழங்களை எடுத்துக்கொள்ளலாம். 

தினமும் ஒரு ஆப்பிள் பழம் எடுத்துக்கொள்வதால் பளபளப்பான உடல் தோற்றத்தையும் ஆரோக்கியமான உடல் நலனையும் தருவதோடு  மட்டுமல்லாமல் பல நன்மைகளையும் வழங்குகிறது..

கர்ப்பிணி பெண்கள் தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் குழந்தை ஆரோக்கியமான உடல் நலம்  கொண்ட குழந்தையாக இருக்கும். பொதுவாக ஆப்பிள் செரிமானத்தை அதிகமாக்கும் உணவுப் பொருள் தான்.

ஆனால் அதில் உள்ள பெக்டின் என்னும்  கார்போஹைட்ரேட், வாயுத் தொல்லையை உண்டாக்கும். எனவே கர்ப்பிணிகள் இதனை அளவாக சாப்பிடுவது நல்லது.

ஒரு ஆப்பிள் பழத்தில் கர்ப்பிணிகள் பயன் பெறும் வகையில் எனர்ஜி, புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், நார், இரும்புசத்து,  வைட்டமின் A-B1-B2 மற்றும் சி போன்ற சத்துக்களை கொண்டுள்ளது.

பொதுவாக கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் ஆப்பிள் சாப்பிட்டால் இரத்தத்தில்  காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ளும். 

அதாவது ஆப்பிள் பழத்தில் இயற்கையாகவே இனிப்பு பொருட்களை உள்ளடக்கியது..

அது இரத்த ஒட்டத்தில் நுழைந்து ரத்தத்தில் கலந்துள்ள  சர்க்கரையின் அளவையும், இன்சூலினையும் கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் சுவாச நோயிலிருந்து குழந்தையை  காத்துக்கொள்ளும். 

ஆப்பிலில் கொண்டுள்ள பைத்தோகெமிக்கல்ஸ் நுரையீரல் மீதான நேர்மறை எண்ணங்களை அழிக்கிறது-. ஆய்வு ஒன்று மேற்கொண்டபோது  கர்ப்பகாலத்தில் அதிகம் ஆப்பிள் சாப்பிட்ட கர்ப்பிணிபெண்களின் குழந்தைகள் 53% சுவாச பிரச்சனை மற்றும் ஆஸ்துமாவிலிருந்து விடுபடுகின்றனர்.  ஆப்பிள் சாப்பிட்டாத கர்ப்பிணிபெண்களின் குழந்தைகளுக்கு நோய் வர வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

ஆப்பிள் பழத்தில் பெக்டின், பாலிபினால்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புகளை தடுத்து ஆக்ஸிஜனேற்றம்  அடைவதற்கான அடர்த்தியுள்ள லிபோபுரோட்டீன் (LDL) கொண்டுள்ளது. தோல் நீக்காமல் ஆப்பிள் சாப்பிடுவது மிக நல்லது.

தோல் நீக்காத ஆப்பிள்  பழத்தில் 2 முதல் 6 மடங்கு ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருட்களை கொண்டுள்ளது. கருவில் இருக்கும் போது ஆப்பிள் சாப்பிடுவதால் ஐந்து ஆண்டுகள்  வரையில் குழந்தைகளை ஆஸ்துமாவிலிருந்து பாதுகாக்கலாம்..

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP