மதியம் வந்தாலே என்ன சமைக்கலாம் என்ற யோசனை தான் அனைவருக்கும் வரும். தினமும் ஏதாவது குழம்பு, பொரியல் என்று செய்து போர் அடிக்குதா. அப்படியென்றால் வித்தியாசமாக இன்று வெஜிடபிள் பிரியாணி செய்து அனைவரையும் அசத்தலாமே! ஸ்வீட்டா, காரமா... ஒரே ஒரு கிளிக்.. உங்க இடத்துக்கே எல்லாம் வரும்! அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வெஜிடேபிள் பிரியாணியை பேச்சுலர்கள் கூட செய்யலாம். சரி, இப்போது வெஜிடேபிள் பிரியாணியை சுலபமாக எப்படி செய்வது என்று பார்ப்போம்...
தேவையானப் பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப்
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 3 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (முழுதாக) புளித்த தயிர் - 1/2 கப் எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன் புதினா - 1/2 கப் கொத்தமல்லி - 1/2 கப் உப்பு - தேவையான அளவு கேரட் - 1 (நறுக்கியது) உருளைக்கிழங்கு - 1 (சற்று பெரிதாக நறுக்கியது) பட்டாணி - 1/2 கப் தாளிப்பதற்கு... பட்டை - 1 கிராம்பு - 3 ஏலக்காய் - 4 எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி 3 கப் தண்ணீர் ஊற்றி, ஊற வைக்க வேண்டும். பின்னர், குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய வைத்து பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, அத்துடன் வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும்.
பிறகு, நறுக்கிய காய்கறிகளை அத்துடன் சேர்த்து பத்து நிமிடம் நன்கு வதக்க வேண்டும். காய்கறி நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி, தயிர், எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, பச்சை மிளகாய் அனைத்தையும் சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
அடுத்து ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் அதில் சேர்க்க வேண்டும். பின்னர், குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் தீயை குறைத்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் கழித்து இறக்கி விட வேண்டும். இப்பொழுது சுவையான வெஜிடேபிள் பிரியாணி தயார்....
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...