தேவையானவை :-
கேழ்வரகு மாவு - 1/4 கப்,
பச்சரிசி மாவு - 1/2 கப்,
சோயா மாவு அல்லது கடலை மாவு - கால் கப்,
உடைத்த கடலை மாவு - 1/4 கப்,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
வறுத்த எள் - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
இஞ்சி, பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்,
தயிர் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
கேழ்வரகு, அரிசி மாவு, கடலை மாவு, உடைத்த கடலை மாவு கலந்து வெண்ணெய் சேர்த்து கலவையை பிரெட் தூள் மாதிரி கலக்கவும்.
இத்துடன் எள், சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, தயிர், உப்பு சேர்க்கவும். மிதமான தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையவும்.
ஒரு கடாயை சூடாக்கி, எண்ணெய் விட்டு, சூடானதும் முறுக்கைப் பிழிந்து சுட்டெடுத்து காற்று புக முடியாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
இந்த முறுக்கு ஆரோக்கியமாக மட்டுமல்ல... ருசியாகவும் கரகரப்பாகவும் இருக்கும்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...