உடலுக்கு நன்மையை கொடுக்க கூடிய கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் குறித்து பார்ப்போம்.அத்யாவசிய தேவைகளுள் ஒன்று எண்ணெய்.
பாரம்பரிய எண்ணெய்களான நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.கடலை எண்ணெய்யை பயன்படுத்தி சருமத்தை பாதுகாப்பது குறித்து பார்ப்போம்.
2 ஸ்பூன் கடலை எண்ணெய்யுடன் அரை மூடி அளவு எழுமிச்சை சாறு, அரை ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இதை வாரம் ஒருமுறை உடல் முழுவதும் தேய்த்து குளிப்பதால் தோல் சுருக்கம் வராமல் பாதுகாக்கும். கடலை எண்ணெய்யை உணவின் சுவையை கூட்டுவதற்காக பயன்படுத்துகிறோம்.
பாதாம் எண்ணெய்யை விட மிகுந்த சத்துக்கள் உடையது. உணவுடன் சேர்த்துக் கொண்டால் நல்ல கொழுப்பு கிடைக்கும். உஷ்ணத்தை தருவதுடன் தோலுக்கு பளபளப்பை கொடுக்கும். கடலை எண்ணெய்யில் வைட்டமின் இ சத்து அதிகம் உள்ளது.
தற்போது நாம் சுத்திகரிப்பு செய்த எண்ணெய்கள், தவிட்டில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்களை பயன்படுத்துகிறோம்.
பாரம்பரிய எண்ணெய்களை பயன்படுத்திய நம் முன்னோர்கள் திடகாத்திரமான உடல், அழகிய சருமத்தை பெற்றிருந்தனர்.நல்லெண்ணெய் பயன்படுத்தி தலைக்கு தேய்த்து குளிக்கும் தைலம் தயாரிக்கலாம்.
தேவையான அளவு நல்லெண்ணெய் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் சீரகம், மிளகுப்பொடி கால் ஸ்பூன் சேர்த்து தைலபதத்தில் காய்ச்ச வேண்டும். இதை தலைக்கு தேய்து குளித்தால் பொடுகு வராது.எள்ளில் இருந்து கிடைக்க கூடியது நல்லெண்ணெய்.
இதை தலைக்கு தேய்த்து குளிப்பதால் பொடுகு இல்லாமல் போகும். கொழுப்பு சத்து நிறைந்தது. உள் உறுப்புகளுக்கு பலம் கொடுக்க கூடியது. வெறும் வயிற்றில் தினமும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சாப்பிடுவதால் உடல் எடை கூடும்.
வாய் கொப்பளிப்பதால் பற்கள் ஆரோக்கியம் பெறும். கன்னம் பலம் அடையும். முக வசீகரம் ஏற்படும். நல்லெண்ணெய் உணவுக்கு பயன்படுவதோடு, சனிக்கிழமைதோறும் உடலுக்கு தேய்த்து குளிப்பதால் தோல் ஆரோக்கியம் பெறும். தோல்நோய்கள் இல்லாமல் போகும்.
தேங்காய் எண்ணெய்யின் மருத்துவ குணங்களை பார்ப்போம். தேங்காய் எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பொடுகு தொல்லை இருக்காது. முடி பளபளப்பாகவும், கருப்பாகவும் இருக்கும்.
தேங்காய் எண்ணெய்யுடன், கருவேப்பிலையை நீர்விடாமல் பொடித்து சேர்க்கவும். தைலப்பதத்தில் காய்ச்சி தலைக்கு தடவுவதால் முடி கருப்பாகிறது. பொடுகு இல்லாமல் போகிறது.
இளநரை தடுக்கப்படுகிறது. தலைக்கு ஆரோக்கியம் கிடக்கிறது. தலைமுடி நன்றாக வளரும்.நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை நாம் அன்றாடம் பயன்படுத்தும்போது பல்வேறு நோய்கள் வராமல் பாதுகாக்கலாம்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...