Loading...
Thursday, 3 March 2016

ஸ்மார்ட்போன் ஆன் ஆகவில்லையா? இதோ வழிமுறைகள்....!!


உங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனை எப்பொழுதும் ஒரு பொத்தானை அழுத்திதானே திறப்பீர்கள்.

அந்த பொத்தான் செயல் பட வில்லையென்றால் அதற்கு வழி இருக்கின்றது.

இந்த பிரச்சனை வன்பொருள் அல்லது மென்பொருள் செயல்படாமல் போனதால் நிகழ்ந்திருக்கலாம்.

வன்பொருள் பிரச்சனை என்றால் தானாகவே சரியாகிவிடும். அதுவே மென்பொருள் பிரச்சனை என்றால் அதற்கு தீர்வுகள் இங்கே.

உங்கள் போன் பேட்டரி சார்ஜ் இல்லாமல் இருந்தால் ’empty battery’ என்ற வாசகம் வரும். பேட்டரி சுத்தமாக தீர்ந்து போய் விட்டால் எந்த அறிவிப்பும் வராது. 10-15 நிமிடத்திற்கு உங்கள் டிவைஸை சார்ஜ் செய்தால் பிரச்சனை தீர்ந்தது.

சார்ஜ் ஏறியவுடனேயே போன் ஆன் செய்து விடலாம். அதற்கு பிறகும் ஆன் ஆக வில்லையென்றால் வேறு கேபிள் அல்லது சார்ஜரை பயன்படுத்தி பார்க்கவும்.

ஆண்ட்ராய்டும் சில நேரங்களில் செயல் இழந்து போகும். உங்கள் டிவைஸ் ஸ்தம்பித்து நின்றால் இயங்குதளம் ஸ்தம்பித்து இருக்கும். அந்த மாதிரி நேரங்களில் ‘hard reset’ அல்லது power cycle செய்யலாம். இதனால் போன் இயல்பு நிலைக்கு மாறும்.

உங்கள் போனின் பேட்டரியை வெளியே எடுக்க முடியாத வடிவமைப்பாக இருந்தால், பவர் பொத்தானை நீண்ட நேரம் அழுத்த வேண்டும். இதானால் போனுக்கான பவர் துண்டிக்க பட்டு மறுபடியும் பவரை வழங்கி போனை செயல்படுத்தும்.

உங்கள் போன் திடிரென செயல் இழந்து போனால் ஃபேக்ட்ரி மோடு சென்று ஃபேக்ட்ரி ரீசெட் செய்யவும்.

ஆண்ட்ராய்டு மொபைலை பவர் டவுன் செய்து பல பொத்தான்களை ஒன்றாக ஒரே நேரத்தில் அழுத்த வேண்டும். நீங்கள் அழுத்தும் போனின் பொத்தான், போனை பொருத்து வேறுபட்டிருக்கும்.

ஒவ்வொரு கருவிக்கு ஒவ்வொரு விதத்தில் பொத்தான் இருக்கும். சில நேரங்களில் போனின் மூன்று பொத்தான்களை சேர்ந்திருக்கும்.

கருவியின் மென்பொருள் பழுதடைந்தால் ஃபேக்ட்ரி ரீசெட் ஒத்துவராது. அப்படியென்றால் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை நிறுவ வேண்டும் என்று அர்த்தம். ஆண்ட்ராய்டின் வெர்ஷன் ஒவ்வொரு கருவிக்கும் மாறுபட்டிருக்கும்.

உங்கள் போன் தயாரிப்பாளர்களின் இணையதளம் சென்று firmwareஐ அதிலிருந்து மேனுவலாக நிறுவவும். அதில் இல்லை என்றால் சர்வீஸ் கடைக்கு எடுத்து சென்று நிறுவிக்கொள்ளலாம்.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP