Loading...
Saturday, 26 March 2016

சமையல் அறைக்கு கதவு கட்டாயமல்ல ஏன் தெரியுமா...??

வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் கதவு இருக்கும். ஆனால் சமையலறைக்கு மட்டும் கதவு கட்டாயம் அல்ல. சிறிய அளவிலான வீடுகளில் சமையலறையை திறந்த அறையாக அமைப்பதால் அதிக இடம் இருப்பது போன்ற தோற்றம் கிடைக்கும். அதனால் நிறைய நன்மைகளும் உண்டு. 

உங்களின் கலை ஆர்வத்தை வீட்டுக்கு வருகிற விருந்தினர்கள் வரவேற்பறையில் உள்ள அலமாரியை வைத்து அறிந்துகொள்வார்கள். உங்களது இல்ல பராமரிப்பை சமையல் அறையை வைத்துத்தான் அறிந்துகொள்ள முடியும். 

சமையலறையில் மற்ற அறைகளைக் காட்டிலும் அதிகமான வெப்பம் இருக்கும். எனவே சமைக்கும்போது கதவு இருந்தாலும் அதை திறந்துவைத்துக் கொண்டுதான் சமைக்க வேண்டும். அதைப்போலவே சமையலறையில் காற்றோட்டமும் சீராக இருக்க வேண்டும்.

சில வீடுகளில் மிக்ஸி, கிரைண்டர் என்று எல்லா மின்னணு சாதனங்களையும் சமையலறையிலேயே வைக்க முடியாது. பக்கத்து அறைகளில் அந்த சாதனங்களை வைத்து தேவைப்படும் சமயங்களில் மட்டும் பயன்படுத்தலாம். அப்போது சமையலறை திறந்த அறையாக இருப்பதே சிறந்தது.

வீட்டில் குழந்தைகள் இருந்தால் கண்டிப்பாக சமையலறை திறந்த அறையாக இருப்பதே நல்லது. அப்போதுதான் சமையல் பணியில் ஈடுபட்டிருந்தாலும் குழந்தைகளின் மீது கவனம் வைத்திருக்க முடியும். சமைக்கும்போது தனிமையை உணராமல் பக்கத்து அறையில் இருப்பவரோடு பேசிக்கொண்டே சமைக்கலா

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP