Loading...
Tuesday, 29 March 2016

சூப்பரான அசத்தலான மீன் பிரியாணி செய்வது எப்படி...!!

மீன் பிரியாணி தேவையான பொருட்கள்

மீன் - 1/4 கிலோ அரிசி - 2 ஆழாக்கு வெங்காயம் - 150 கிராம் தக்காளி - 150 கிராம் பச்சை மிளகாய் - 2 இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன் புதினா, கொத்தமல்லி இலை - 1/4 கட்டு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் தனியாத்தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் தயிர் - 1 கப் உப்பு - தேவையான அளவு எண்ணை - 1/2 குழிக் கரண்டி

செய்முறை *

மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும், * வெங்காயம், தக்காளியை பொடியாக நீளவாக்கில் நறுக்கவும். மிளகாயைக் கீறிக் கொள்ளவும். * ஒரு அகலமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்துத் தாளிக்கவும். * வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். * தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து மீனை வதக்கவும்.

தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும். * பாசுமதி அரிசி ஒன்றரை பங்கும், சாதா அரிசி 2 பங்கும் சேர்த்து வேக வைக்கவும். பாத்திரத்தில் `தம்` சேர்த்து (ஆவி போகாமல் மூடிவைத்து) சிறிது நேரத்தில் இறக்கவும். * குக்கரில் ஒரு விசில் வந்ததும், குறைந்த தீயில் வைத்திருந்து அடுப்பை அணைத்து விடவும். * சுவையான மீன் பிரியாணி மணமணக்க ரெடி.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP