தேவையான பொருட்கள்;
பிரண்டை - ஒரு கட்டு
மிளகாய்வற்றல் - 6
இஞ்சி - ஒரு. விரல் நீளத் துண்டு
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
உளுத்தம்பருப்பு - 1ஸ்பூன்
புளி - ஒரு சிறு உருண்டை
தேங்காய்ப்பூ - இரண்டு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை ;
பிரண்டையை நார், ஓரப் பகுதிகளை நீக்கிச் சுத்தம் பண்ணித் துண்டுகளாக்கவும். இஞ்சியைத் தோல் சீவித் துண்டுகளாக்கவும். மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பை வறுத்துக் கொண்டு, பின் சிறிது நல்லெண்ணெய்
ஊற்றி, இஞ்சியையும், பிரண்டைத் துண்டுகளையும் நன்கு வதக்கவும். லேசாகப் பொரியும்படி வதக்கவும். புளியையும் வதக்கி, கறிவேப்பிலையையும் வறுத்துக் கொள்ளவும்.
சற்றே ஆறியதும், உப்பு, தேங்காய்ப்பூ சேர்த்து மிக்சியில் அரைக்கவும். ஒரு கிண்ணத்தில் வழித்து வைத்து, சிறிது நல்லெண்ணெயில், கடுகு உளுத்தம்பருப்பு தாளித்துத் துவையலில் கொட்டவும்.
இந்த பிரண்டைத் துவையல் சுடு சாதத்தில், நெய்யூற்றி, போட்டுப் பிசைந்து சுட்ட அப்பளம் அல்லது பொரித்த அப்பளத்துடன் சாப்பிட அருமையான சுவையுடன் இருக்கும்.
பிரண்டை கால்சியச் சத்து நிறைந்த ஓர் அருமையான உணவு. எலும்புகளை வலுவடையச் செய்யும். அடிக்கடி உணவில் சேர்த்தால், முதுகு வலி, இடுப்பு வலி, எலும்புத் தேய்மானம் இவற்றைத் தவிர்க்கலாம்.
இஞ்சி செரிமானத்தைத் தூண்டும். கறிவேப்பிலை நரம்பு மண்டலத்துக்கு வலுச் சேர்ப்பதோடு, இரும்புச் சத்தும் நிறைந்தது!
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...