இல்லறம் மற்றும் தாம்பத்திய உறவில் புரிதல் நிலைக்கவும், விரிசல் விழாமல் தடுக்கவும் ஐந்து விஷயங்களை நீங்கள் இருவரும் சேர்ந்து கற்றுக் கொள்ள வேண்டும்….
இல்லறம் என்பது கடினமானது அல்ல என்பதை மனதளவிலும், உடலளவிலும் அவர்களுக்கு புரிதலை ஏற்படுத்த வேண்டும்.
வீட்டை நல்வழி படுத்துதல், தாம்பத்தியத்தில் ஈடுபடுதலை இது குறிக்கிறது. இவை இரண்டிலும் தான் பெண்கள் ஆரம்பக் கட்ட இல்லற வாழ்க்கையில் சற்று பயப்படுவார்கள்.
தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது ஆரம்ப நாட்களில் வலி ஏற்படுவது இயல்பு. இதை பெண்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
மேலும், பிள்ளை வளர்ப்பு மற்றும் குடும்பத்தை வழிநடத்துதல் போன்றவை பற்றி கற்றுக் கொள்ள வேண்டும்.
வேலையில் அதிக நேரத்தை செலவிடுவதால், இல்லறத்தை யாரும் மறந்துவிடுவதில்லை. அளவில்லாத காதலுக்கு இவை பெரிய தடையில்லை என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும்.
ஏனெனில், பெண் எப்போதுமே தன் கணவனுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என எண்ணுவாள்.
நமது இன்பமும், துன்பமும் நமது கையில் தான் இருக்கின்றன என்பதை நாம் முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும். எந்த சூழலிலும் இருவரும் ஒன்றாக செயல்பட வேண்டும். கணவன், மனைவி உறவில் நேர்மை மிகவும் முக்கியம்.
உண்மையை மறைப்பது, போலியாக நடிப்பது நீண்ட நாட்கள் நீடிக்காது. எனவே, எதுவாக இருப்பினும், முதலிலேயே பேசி முடித்துக் கொள்ள வேண்டும்.
எல்லா உணர்வுகளும் எல்லாருக்கும் பொதுவானது தான். பாசம் என்றால் பெண்ணும், காமம் என்றால் ஆணும் தான் முதலில் வெளிப்படுத்த வேண்டும் என்பது பொய். எனவே, உணர்ச்சியை மறைக்காமல் வெளிப்படுத்த வேண்டும்.
நம்பிக்கை மட்டுமே உறவை காப்பாற்றும் தொப்புள்கொடி. இது அறுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது கணவன், மனைவியுடைய வேலை.
சமூகம் மற்றும் மூன்றாம் மனிதர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை, உங்கள் துணை மீது வைக்க வேண்டும்.
நல்ல புரிதல் இருக்கும் இடத்தில், பிரிதல் ஏற்படாது.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.