உண்ணும் உணவுக்கும் உறவுக்கும் தொடர்பு உள்ளது என்பதனால்தான் பண்டைய காலத்தில் இருந்தே பக்குவமாக சமைத்து உண்டுள்ளனர் நம் முன்னோர்கள். ஆனால் இன்றைய அவசர யுகத்தில் பாஸ்ட்ஃபுட், பர்கர்,பீட்ஸா என்று உண்பதால் சரியான சத்துக்கள் கிடைக்காமல் ஆண்களின் ஆண்மைக்கே ஆபத்து ஏற்படுகிறது. சத்தான உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்களுக்கு தேவையான ஆண்மையை அதிகரிக்கக் கூடிய சக்தி கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
* காலை உணவுக்குப்பின் சிறிதுநேரம் கழித்து 10 பேரீச்சம்பழங்கள் சாப்பிட்டு சிறிது வெந்நீர் அருந்துங்கள். அதேபோல் இரவு உணவுக்குப்பின் 10 பேரீச்சம் பழங்களை உண்டு பசும்பால் குடியுங்கள். தொடர்ந்து 2 மாதம் இவ்வாறு சாப்பிட்டு வந்தால் ஆண்மை சத்தி குறிப்பிடத்தக்க அதிகரிக்கும். இந்த நாட்களில் குளிர்ச்சியான பானங்கள், உணவுகள் சாப்பிடக்கூடாது.
* சைவ உணவை சாப்பிடுபவர்கள் தினசரி உணவில் அரைக்கீரையை வாரம் 2 அல்லது 3 முறை தொடர்ந்து சாப்பிட வேண்டும். செலரியில் உள்ள தாவர ஈஸ்ட்ரோஜன் செக்ஸ் கிளாச்சியை தூண்டும். ஆண்களும், பெண்களும் செலரியை சாலட் போல சாப்பிடலாம்.
* ஆண்மை அதிகரிக்க வாழைப்பழம் சிறந்த உணவாகும். இதில் உள்ள பொட்டாசியம், பி வைட்டமின் உடலுக்குத் தேவையான சக்தியை அதிகரிக்கும். அதேபோல் ஆவகேடோ எனப்படும் வெண்ணெய் பழம் சக்தி தரக்கூடியது.
* கடல் சிப்பியில் துத்தநாகச் சத்து அதிகம் உள்ளது. இது விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும். டெஸ்ட்டோஸ்டிரன் ஹார்மோனை சரியாக சுரக்கச் செய்யும். இது மூளையில் டோபமைன் ஹார்மோனை தூண்டும்.
* வெள்ளாட்டுக் கறியும், இறால் உணவும் நல்லது. அதுவும் இறைச்சியை உப்பு மஞ்சள் பூசி காயவைத்துப்பதப்படுத்திய உப்புக்கண்டம் உண்ணலாம். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர 50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
* இளமையில் ஏற்படும் ஆண்மைக் குறைவை முறையாக முட்டை உண்பதன் மூலம் போக்கலாம். முட்டையில் வைட்டமின்கள் பி6, பி5 உள்ளது.
இது மனஅழுத்தத்தை குறைக்கும். ஹார்மோன்களை சரியான அளவில் சுரக்கச் செய்யும். பச்சை முட்டையை சாப்பிட சக்தி அதிகரிக்கும். ஆண்களுக்கு கிளர்ச்சி ஏற்படும். இரண்டு நாட்டுகோழி முட்டைகளை ஒரு மண்பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் சிறிது சூடுபடுத்திய பின் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து சிறிது சூட்டோடு உண்ணவும். காலை உணவுக்குப் பதிலாக இப்படி முட்டை மட்டும் சாப்பிட்டு பின் பால் அருந்திவரவும். 3 மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் முழுபலன் உண்டு.
* புதிதாக திருமணமானவர்கள் தினசரி உறவு கொள்வதில் சிக்கல் இல்லை. அதேசமயம் திருமணமாகி சில ஆண்டுகள் கழித்த பின்னரும் தினசரியோ, வாரம் 3 அல்லது 4 நாட்களுக்கோ உறவில் ஈடுபடுவது ஆற்றலை அழித்துவிடும் என்று எச்சரிக்கின்றனர்.
வாரம் ஒருமுறை அல்லது இருமுறை செக்ஸ் வைத்துக்கொண்டால் உடலின் தற்காப்புத்திறன் மேம்படுவதோடு வாழ்நாட்களும் அதிகரிக்கும். மேலும் செக்ஸ் பற்றி தெரிந்து கொள்வதற்காக ஆபாச நூல்களைப் படிப்பது, இணையதளத்தில் ஆபாச படங்களைப் பார்ப்பதால் மனமும், உடலும்கெட்டுப்போகும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.