நாம் தூக்கி எறியும் பழங்களின் தோல், கொட்டை ஆகியவற்றில் ஏராளமான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளதால் இவற்றை விதவிதமான உணவாக சமைத்து உண்பது நமது பாரம்பரிய வழக்கமாகும்.
அசைவ உணவைப் போன்ற ருசியைத் தரும் காளான், சோயா மற்றும் பட்டர்பீன்ஸ் போன்றவை பெருமளவு விரும்பி உண்ணப்படுகின்றன.
பழங்களைவிட ஒரு மரத்தையே உருவாக்கும் பழக்கொட்டையில் உளள மரபணு கூறுகள் நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகம் பெற்றிருப்பதுடன், இவை செல்களை அழிவிலிருந்து காக்கும் ஆற்றலையும் உடையது.
இவற்றை உண்பதற்கு ஏற்றவாறு ருசியாக சமைத்து சாப்பிட்டால் உணவே மருந்தாகும். அதுபோன்ற அற்புத ஆற்றல் தரும், ஆண்களின் வலிமையைப் பெருக்கும் தன்மை உள்ளது தான் பலாக்கொட்டை.100 கிராம் பலாக்கொட்டையில் 135 கிலோ கலோரி சத்து உள்ளது.
இவற்றில் உள்ள கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் ஏ, பி, சி போன்ற வைட்டமின்கள், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற தனிமங்கள் உள்ளன.
இவற்றில் காணப்படும் லிக்னான்கள், ஐசோபிளேவோன்கள், சப்போனின்கள் புற்றுநோய்,செல் முதிர்ச்சி,செல் அழிவு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டவை. அதிக ரத்த அழுத்தம் மற்றும் குடற்புண்களை ஆற்றும் தன்மையும் பலாக்கொட்டைக்கு உண்டு.
பலாக்கொட்டையை தோலுரித்து கழுவி ஒன்றிரண்டாக இடித்த பலாக்கொட்டை-10,பட்டர்பீன்ஸ்-20,உருளைக்கிழங்கு-1, பச்சைப்பயறு-100 கிராம் ஆகியவற்றை நீரில் ஊறவைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ள வேண்டும்.
தேங்காய், மிளகாய்தூள், மஞ்சள்தூள், பூண்டு, புளிச்சாறு ஆகியவற்றை நீர்விட்டு மையாக அரைத்து, வெந்த பலாக்கொட்டை கலவையுடன் சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்கவைத்து கறிவேப்பிலை, கடுகு, மிளகாய் சேர்த்து தாளித்து குழம்பு பதத்தில் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
இதனை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட உடலுக்கு வலிமையும் குளிர்ச்சியும் உண்டாகும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும். பலம் உண்டாகும்.
பலாக்கொட்டையை மட்டும் தனியாக அதிகம் உட்கொண்டால் உஷ்ணம் அதிகரித்து,வயிற்றில் வலி, முதுகுப்பிடிப்பு ஏற்படும் எனவே இதனை உணவாக சமைத்து உட்கொள்வதே நல்லது…
ஐயா எனக்கு 2வருடங்களா௧
ReplyDeleteகாது கேளாமை பிரச்சனை உள்ளது ஒரு நல்ல தீர்வு சொல்லுங்கள் நன்றி...
உங்களது குறிப்பு மிகவும் அருமையாக உள்ளது......
ReplyDeleteமேலும் குறிப்புகளை அறிய இதோ...http://www.healthtiptamil.xyz/2022/05/How-to-increase-women-sexual-power-in-tamil.html.....படியுங்கள் பயன் பெறுங்கள்....
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.