கணவன், மனைவி மத்தியில் போட்டிப் பொறமை துளியும் இருக்கக் கூடாது. காதல் மற்றும் அன்பு செலுத்துவதில் போட்டியைக் காட்டுவது கூட யாரேனும் ஒருவரை நாம் குறைவாக அன்பு செலுத்துகிறோமா என்ற தாழ்வு மனப்பான்மை ஏற்பட காரணமாக
இருந்துவிடும். எனவே, இல்லறம் நல்லறமாக இருக்க வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என முதலில்
தெரிந்துக் கொள்ளுங்கள்....
* கணவன், மனைவி உறவில் எதுவாக இருப்பினும் அதை ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை இருத்தல் வேண்டும். இல்லையேல்
உறவில் காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. உங்கள் துணையுடன் வீம்புக்கு செயல்படுவதால் எந்த பலனும் கிடையாது.
எனவே, ஒப்புக்கொள்ளுங்கள், அது எவ்வளவு பெரிய தவறாக இருப்பினும் கூட, சூழ்நிலை அறிந்து எடுத்துக் கூறுங்கள்.
* ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை இல்லாமல் இருத்தல், காலப்போக்கில், வன்மம் மற்றும் பழிவாங்கும் குணத்தை அதிகரிக்கும் கருவியாக மாறிவிடும். இதனால் உங்கள் உறவில் விரிசல் ஏற்படலாம்.
* பரஸ்பர உறவு நீரினை போல தங்குதடையின்றி அமைய வேண்டும் எனில், ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்க
கற்றுக்கொள்ள வேண்டும். தன்னார்வமாக சென்று உதவி செய்ய வேண்டும். அவர் கேட்கும் வரை காத்திருக்கிறேன் என்று இருப்பது
நல்ல பரஸ்பர உறவிற்கு உகந்தது அல்ல.
* இழுத்துப்போட்டு கொண்டு அனைத்து வேலைகளும் செய்ய வேண்டும் என்று எந்த பெண்ணும் எதிர்பார்க்கவில்லை. ஆனால்,
குறைந்தபட்சம் சிறு சிறு உதவிகள் செய்வது, தங்கள் கணவன் தன் மீது அன்பாக இருக்கிறான், தன் வேலைகளையும் கூட பகிர்ந்துக்
கொள்கிறான் என்ற மன நிறைவை தரும் என பெண்கள் கூறுகிறார்கள்.
* நான் தான் பெரிது, நீதான் பெரிது என்ற போக்கில்லாமல், நாம் இருவரும் சமம் என்ற சமநிலையை உருவாக்க வேண்டும். அப்போது தான் உறவு மேம்படும், இருவர் மத்தியிலான இறுக்கம் பெருகும்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.