உணவருந்தாமல் கூட மாதக்கணக்கில் உயிர் வாழ்ந்துவிட முடியும். ஆனால், தண்ணீர் அருந்தாமல் உங்களால் இரண்டு நாட்களை கூட தாண்ட முடியாது. உடலில் தண்ணீர் வறட்சி அதிகரிக்க, அதிகரிக்க, உடல் உறுப்புகளின் செயலாற்றல் குறைய ஆரம்பிக்கும்.
இரத்த ஓட்டத்தில் இருந்து மூளை, இதயம், நுரையீரல், சிறுநீரகம் என அனைத்து உடல் பாகங்களும் ஒவ்வொன்றாக ஸ்தம்பிக்க ஆரம்பிக்கும். இதனால், தான் சரியான நேர இடைவேளையில் தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பரவலாக ஒரு நாளுக்கு மூன்று லிட்டர் அளவு தண்ணீர் அனைவரும் அருந்த வேண்டும் என கூறப்படுகிறது. அவரவர் உடல் எடைக்கு ஏற்ப தான் நீரை உட்கொள்ள வேண்டும். ஏனெனில், அளவுக்கு மீறி தண்ணீர் பருகுவதால் உடல்நல சீர்கேடுகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.
எனவே, உங்கள் உடல் எடைக்கு ஏற்ப தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என தெரிந்துக் கொள்ளுங்கள்….
45 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 1.9 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.
50 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.1 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.
55 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.3 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.
60 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.5 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.
65 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.7 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.
70 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.9 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.
75 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.2 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.
80 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.5 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.
85 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.7 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.
90 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.9 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.
95 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 4.1 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.
100 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 4.3 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.