Loading...
Thursday, 14 April 2016

வெண்டை பக்கோடா செய்யலாம் வாங்க...!!

என்னென்ன தேவை?

வெண்டைக்காய் – 100 கிராம்

கடலை மாவு – 1 கப்

சோள மாவு, அரிசி மாவு – தலா 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

தனியாத்தூள், மிளகுத்தூள்,
சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன்

காய்ந்த ரொட்டித்தூள் – 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வெண்டைக்காயை வட்டமாகவோ, நீளவாக்கிலோ நறுக்கிக் கொள்ளவும். கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு இவற்றை ஒன்றாகக் கலக்கவும்.

இவற்றுடன் தனியாத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், தேவையன அளவு உப்பு, நறுக்கிய வெண்டைக்காய் ஆகியவற்றைச் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்துப் பிசையவும்.

இந்தக் கலவையை 15 நிமிடங்கள் ஊறவிடவும். பொரிப்பதற்கு முன் வெண்டைக்காய் கலவையை ரொட்டித்தூளில் புரட்டியெடுத்து, சூடான எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும். காரம் அதிகம் வேண்டும் என்றால் 1 டீஸ்பூன் மிளகாய்த்தூளை மாவுக் கலவையுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP