வீட்டில் வீடியோ கண்காணிப்பு கேமரா பொருத்துவது அனைவருக்குமே மிகவும் நல்லது. பல கடைகள், சமூக கூடங்கள், மற்றும் பொது இடங்களில் 24x7 வீடியோ கண்காணிப்பு அடங்கிய CCTV கேமரா பொருத்துவதைப்போல, வீட்டிலும் பொருத்தலாம்.
வெப்கேம் போன்ற கேமராவை நீங்கள் ஏற்கனவே உங்கள் வீட்டில் பொருத்தி இருக்கக் கூடும். இந்த வெப்கேமை செக்யூரிட்டி கேமராவாக பொருத்தி கொள்ள முடியும். Icam மிகவும் பிரபலமான மென்பொருளாக இயங்கி வருகின்றது. இதை விண்டோஸ் மற்றும் மேக் கணினியுடனும் அல்லது ஐபோனுடன் இணைத்து கொள்ள வேண்டும். இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ள முடியும். இதற்கு உங்கள் மொபைல் ஆப்பில் ரூ.5 கட்டணம் செலுத்தினால் போதுமானது.
உங்கள் பழைய ஸ்மார்ட்போனை பயனுக்கு கொண்டு வர வேண்டிய நேரம் இது. இன்றைய காலக்கட்டத்தில் எல்லா போனிலும் கேமரா உள்ளது ஏன் நீங்கள் அதை பயன்படுத்தக் கூடாது. ஐபோன், ஆண்ட்ராய்ட் ப்ளாக்பெரி என எதுவாக இருந்தாலும் அதில் உள்ள கேமரா உங்களுக்கு பயன் தரும். உங்கள் பழைய போனில் இருந்து புதிய போனுக்கு நேரலையில் வீடியோ அனுப்பக்கூடிய பொருத்தமான ஆப்ஸை மட்டும் தேடி எடுங்கள். எடுத்துக்காட்டாக presence. இது ஒரு இலவச iOS ஆப். இதன் மூலம் வை-பை அல்லது மற்ற நெட்வர்க் மூலம் லைவ் வீடியோவை நீங்கள் தூரத்தில் இருந்து பார்க்க முடியும். இதில் கண்காணிப்பு அம்சம் உள்ளது. இதில் ஆடியோ வசதியும் உள்ளது.
இந்த கண்காணிப்பு மற்றும் ஸ்போர்ட் கேமரா அம்சம் கொண்ட ஒரு டூ இன் ஒன் கேமரா உங்களுக்கு உதவும். இதில் உள்ள FLIR FX அம்சம் 160 டிகிரி கோணத்தில் படம் பிடிக்கவும் மற்றும் 1080p பதிவு செய்யவும் உதவும். இதனால் வெப்பம் மற்றும் ஈரப்பதம் போன்றவற்றை பதிவு செய்ய முடியும். இது ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் செயலிகளில் செயல் புரியும்.
இங்கு பட்டியல இடப்பட்டுள்ள மற்றவைகளை போல் இல்லாமல் வீட்டு கண்காணிப்பு கேமராவில் இது மிகவும் கச்சிதமானது. இது முக்கியமாக வீட்டு கண்காணிப்புக்கென்று வடிவமைக்கப்பட்டுள்ள செயலி என்பதால் கொஞ்சம் அதிக செலவாகும் என்றாலும் மிகவும் சிறப்பானது. இதில் அதிக பவர் இருப்பதால் சில நேரங்களில் நெட் மூலம் நீங்கள் இதை பயன்படுத்தும் போது வேறு ஒருவர் தவராக கையாளக்கூடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
Raspberry Pi Security Cam விலை மலிவு என்பதுடன் இதனை யுஎஸ்பி வெப்கேம் அல்லது PI கேம் மூலம் செயல்படுத்த முடியும். இது லேசான எடை உடையது
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.