விந்தணு குறைபாட்டினால் புதிய சந்ததியை உருவாக்க முடியாத நிலை. அதனால் ஏற்படும் மனச்சோர்வு ஆண்களை பாதிப்பிற்குள்ளாக்குகிறது.
இந்த குறைபாட்டை நீங்க மருத்துவமனைகளுக்கு சென்று பல ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கும் ஆளாகின்றனர்.
ஆண்மைக் குறைபாடுள்ள ஆண்கள் இனி கவலைப்பட வேண்டாம் தக்காளி சூப் அவர்களுக்கு நிவாரணம் தருகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். தினம் ஒரு கப் தக்காளி சூப் குடிப்பது விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.
தக்காளியில் இருக்கும் லைக்கோப்பின் எனும் பொருள் தான் தக்காளிக்கு அடர் சிவப்பு நிறத்தைத் தருகிறது. அந்த மூலக்கூறு தான் ஆண்களின் விந்தணு வீரியத்திற்கு காரணமாய் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். லைக்கோப்பின் ஆனது புற்று நோயை தடுக்கும் சக்தி உடையதாக இருப்பதால் தக்காளி உட்கொள்வது புற்றுநோய் செல்களை அழிக்கும் என்பது பல காலமாக பேசப்பட்டு வரும் தகவல். இப்போது “இந்த” புதிய பயனும் அதனுடன் இணைந்திருக்கிறது..
ஆண்களே அதுக்காக ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் மட்டும்தான் சூப் குடிக்கணும் என்றில்லை. இல்லாதவங்களும் கூட குடிக்கலாம் – வராம தவிர்க்கலாம்….
இப்ப தக்காளி சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம்..
தேவையான பொருட்கள் :
நன்கு பழுத்த தக்காளி – 5
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 6 பல்
சோள மாவு – 1 மேஜைக் கரண்டி
வெண்ணெய் – 2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் – 2 மேஜைக் கரண்டி
மிளகுத்தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
1. வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. வெண்ணெயை உருக்கி, அதில் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் வதங்கியதும், தக்காளி, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து வதக்கவும்.
4. தக்காளி பச்சை வாசனை போக வதங்கியபின், 300 மில்லி தண்ணீர் (அல்லது கால் லிட்டர்) தண்ணீர் சேர்க்கவும்.
5. சிறு தீயில் 10 நிமிடம் கொதித்த பிறகு, கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டிக் கொள்ளவும்.
6. வடிகட்டிய தண்ணீரில் தக்காளி சாஸ் கலந்து, பிறகு அதில் தனியே தண்ணீரில் கரைத்த சோள மாவைச் சேர்க்கவும்.
7. பின்னர் 5 நிமிடம் கொதிக்கவிட்ட இறக்கி வைத்து, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.
அருமை, நன்றி தக்காளி ஜூஸ் நன்மைகள், பயன்கள் மற்றும் செய்முறை
ReplyDeleteClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.