Loading...
Saturday, 23 April 2016

மஞ்சள் காமாலையை எதிர்கொள்வது எப்படி அதற்கான தீர்வுகள் என்ன...??


தமிழ்நாட்டில் எந்த நோய்க்கு இலவசமாக மூலிகை மருந்துகள் தருகிறார்கள் என்று கேட்டால் உடனே பதில் சொல்லிவிடுவார்கள் ‘மஞ்சள் காமாலைக்கு’ என்று. தென்கோடி காரையாறு தொடங்கி வட கோடி வடசென்னை வரை இந்த நோய்க்கு இலவச மருந்து கொடுக்காத ஊர் தமிழகத்தில் இல்லை. அந்த அளவுக்கு மஞ்சள் காமாலை பிரபலம்.

எது மஞ்சள் காமாலை?

மஞ்சள் காமாலை என்பது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல.  ஒரு அறிகுறி. கல்லீரல் கெட்டுவிட்டது என்று தெரிவிக்கிற ஒரு வெளிப்பாடு. இது இரண்டு விதங்களில் வெளிப்படுகிறது. ஒன்று, கிருமி சார்ந்த மஞ்சள் காமாலை (Infectious Jaundice); மற்றொன்று, கிருமி சாராத மஞ்சள் காமாலை (Metabolic Jaundice). 

பாக்டீரியா, வைரஸ் என்று ஏதாவது ஒரு கிருமி கல்லீரலைத் தாக்கும்போது மஞ்சள் காமாலை ஏற்படுவது முதல் வகையைச் சேர்ந்தது. மது குடிப்பது, தேவையில்லாமல் மாத்திரை மருந்து சாப்பிடுவது, அதிகமாக கொழுப்புணவு சாப்பிடுவது, பித்தப்பை வீங்கி அடைத்துக்கொள்வது… இப்படிப் பல காரணங்களால் கல்லீரல் பாதிக்கப்படும்போதும் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. இது இரண்டாம் வகையைச் சேர்ந்தது. 

வைரஸ்களின் ஆதிக்கம்!

சுற்றுப்புற சுகாதாரம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியா போன்ற நாடுகளில் கல்லீரலைப் பாதிக்கிற விஷயங்களில் வைரஸ் கிருமிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவற்றில் ஹெபடைட்டிஸ் வைரஸ் அதிமுக்கியமானது. ஏ, பி, சி, டி, இ, ஜி என இவற்றில் பல வகைகள் உள்ளன. ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் பி வைரஸ்களின் தாக்குதல் நம் நாட்டில் அதிகம். எனவே, அந்த இரண்டு வைரஸ்கள் ஏற்படுத்துகிற மஞ்சள் காமாலைகளை மட்டும் இங்கு தெரிந்துகொள்வோம்.

1. ஹெபடைட்டிஸ் ஏ மஞ்சள் காமாலை 

ஹெபடைட்டிஸ் ஏ’ (Hepatitis A)எனும் வைரஸால் ஏற்படுகிற ஒரு தொற்றுநோய் இது. நடைமுறையில் சாதாரணமாக நாம் காண்கிற மஞ்சள் காமாலை இதுதான். பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை எவருக்கும் இது வரலாம். என்றாலும், இதனால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கு மேல் குழந்தைகளாகத்தான் இருக்கிறார்கள். அதேவேளையில் பெரியவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவது போல், இது குழந்தைகளுக்கு அவ்வளவாக ஆபத்தை ஏற்படுத்துவது இல்லை.

நோய் வரும் வழி 

நோயாளியின் மலத்தில் இந்த நோய்க் கிருமிகள் இருக்கும். ஈக்கள் மூலம் பிற இடங்களுக்குப் பரவும். மாசடைந்த உணவு, அசுத்தமான குடிநீர் மூலம் இவை மனித உடலில் புகுந்து நோயை ஏற்படுத்தும். நோயாளியுடன் நெருங்கிப் பழகுபவர்களுக்கும் இது பரவலாம். இது பரவியுள்ள இடங்களுக்கு அண்மையில் பயணம் செய்திருந்தால், அவர்களுக்கும் இந்த நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.

அறிகுறிகள்  
 
இந்த நோய்த்தொற்று ஏற்பட்டவருக்குப் பசிக்காது. காய்ச்சல், வாந்தி, களைப்பு  ஏற்படும். வயிறு வலிக்கும். உடல் அரிக்கும். கண்களும் தோலும் மஞ்சள் நிறத்தில் காணப்படும். சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போகும். மலம் வெள்ளை நிறத்தில் போகும். 

மஞ்சள் நிறம் ஏன்?

மஞ்சள் நிறத்தில் ‘பிலிருபின்’ என்ற ஒரு நிறமிப்பொருளைக் கல்லீரல் சுரக்கிறது. சாதாரணமாக இதன் அளவு ஒரு டெசி லிட்டர் ரத்தத்தில் 0.8 மி.கி. என்ற அளவில் இருக்கும். கல்லீரல் பாதிக்கப்படும்போது இந்தச் சுரப்பு அதிகரிப்பதால் ரத்தத்திலும் இதன் அளவு கூடும். அப்போது கண், தோல், நகம், சிறுநீர் ஆகியவை மஞ்சள் நிறத்துக்கு மாறும். இதைத்தான் மஞ்சள் காமாலை என்கிறோம்.

சிகிச்சையும் தடுப்பு முறையும்

அலோபதி மருத்துவத்தில் இதற்கெனத் தனிப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லை. மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே காமாலை குணமாகிவிடும். கீழா நெல்லிக்கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை மற்றும் சில அனுபவ மருந்துகளை சித்த மருத்துவத்தில் தருகிறார்கள்.

ஹெபடைட்டிஸ் பி மஞ்சள் காமாலையோடு ஒப்பிடும்போது ஹெபடைட்டிஸ்ஏ அதிக ஆபத்து இல்லாதது. என்றாலும், மழைக்காலத்திலும், வெயில்கால ஆரம்பத்திலும் இது ஒரு கொள்ளை நோயாகப் பரவுகிறது. இதைத் தடுக்க அலோபதி மருத்துவம் ஹெபடைட்டிஸ் ஏ தடுப்பூசியைக் கண்டுபிடித்து உள்ளது. இதை முறைப்படி போட்டுக் கொள்கிறவர்களுக்கு இந்த நோய் அவர்கள் வாழ்க்கை முழுவதும் வருவது இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தடுப்பூசி வகைகள்

ஹெபடைட்டிஸ் ஏ நோய்த்தொற்றைத் தடுக்க வீரியம் குறைக்கப்பட்ட  நுண்ணுயிரித் தடுப்பூசி (Inactivated Hepatitis A vaccine ), உயிர் நுண்ணுயிரித் தடுப்பூசி (Live attenuated hepatitis  A  vaccine) என்று இரண்டு வகை தடுப்பூசிகள் உள்ளன. இவற்றில் ஒன்றைப் பயன்படுத்திப் பலன் பெறலாம். 

போட்டுக்கொள்ளும் முறை 

வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரித் தடுப்பூசி: குழந்தைக்கு ஒரு வயது முடிந்ததும் முதல் தவணை தடுப்பூசியைப் போட வேண்டும். ஒன்றரை வயது முடிந்ததும் இரண்டாம் தவணையைப் போட வேண்டும். 

உயிர் நுண்ணுயிரித் தடுப்பூசி:  குழந்தைக்கு ஒரு வயது முடிந்ததும் ஒரு தவணை போட்டுக்கொண்டால் போதும். ஒருவருக்கு ஹெபடைட்டிஸ் ஏ மஞ்சள்காமாலை வந்த பிறகு இந்தத் தடுப்பூசியைப் போடவேண்டியது இல்லை.

போட்டுக்கொள்ளவில்லை என்றால்?

இரண்டு வயதுக்குள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாதவர்கள் அனைவரும் அதற்குப் பிறகு எந்த வயதிலும் போட்டுக்கொள்ளலாம். வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரித் தடுப்பூசி போடப்படுவதாக இருந்தால், ஆறு மாதங்கள் இடைவெளியில் இரண்டு தவணைகளாகப் போட்டுக்கொள்ள வேண்டும். உயிர் நுண்ணுயிரித் தடுப்பூசி போடப்படுவதாக இருந்தால், ஒரு தவணை போட்டுக்கொண்டாலே போதும். பத்து வயதுக்கு மேல் இதைப் போட்டுக்கொள்கிறவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ரத்தப்பரிசோதனை செய்துகொண்டு அதன்படி தடுப்பூசி தேவையா, இல்லையா என்று முடிவு செய்ய வேண்டும்.

சுத்தம் காக்கும்!

ஹெபடைட்டிஸ் ஏ மஞ்சள் காமாலையைத் தடுக்க குடிநீரைக் கொதிக்க  வைத்து, ஆற வைத்து குடிக்க வேண்டும். உணவு தயாரிக்கும்போதும் அதைப் பயன்படுத்தும்போதும் சுத்தம் மற்றும் சுகாதார முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். உணவுப் பண்டங்களை நன்றாக மூடிப் பாதுகாக்க வேண்டும். உணவை சாப்பிடும் முன்பும் சாப்பிட்ட பின்பும் கைகளை நன்றாக கழுவிச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். சுத்தம், சுகாதாரம் குறைந்த உணவு விடுதிகளில், சாலையோரக்கடைகளில் அடிக்கடி சாப்பிடக்கூடாது. 

உணவுக்கட்டுப்பாடு

இந்த நோய் உள்ளவர்கள் இறைச்சி, முட்டை, தயிர், வெண்ணெய், நெய் போன்ற கொழுப்பு மிகுந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. காரணம், கொழுப்பு உணவுச் செரிமானம் ஆவதில் கல்லீரலின் பங்கு அதிகம். இந்த நோயின்போது  கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதால், கொழுப்பு உணவுகள் செரிமானம் ஆகத் தாமதமாகும். எனவே, எளிதில் செரிமானம் ஆகக் கூடிய ஆவியில் அவித்த இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளைஅதிகப்படுத்த வேண்டும். அரிசிக் கஞ்சி, இளநீர், மோர், கரும்புச்சாறு, குளூக்கோஸ், பழச்சாறுகள் சாப்பிடலாம். இந்த நோய் வந்தவர்கள் ஆயுள்முழுவதும் மது அருந்தக்கூடாது. புகை பிடிக்கக்கூடாது.

2. ஹெபடைட்டிஸ் பி மஞ்சள் காமாலை

‘உயிர்க்கொல்லி நோய்’ என்று அழைக்கப்படுகிற ‘ஹெபடைட்டிஸ் பி’(Hepatitis B) மஞ்சள் காமாலை  மிகவும் ஆபத்தானது. ‘ஹெபடைட்டிஸ்பி’ வைரஸ் கிருமிகள் கல்லீரலைத் தாக்கி இந்த மஞ்சள் காமாலையை ஏற்படுத்துகின்றன. உலகில் சுமார் 20 கோடி பேர் இந்த நோயால் அவதிப்படுகிறார்கள். இதற்கு பிரத்யேகமாக மருந்து, மாத்திரை, சிகிச்சை எதுவுமில்லை. இது வந்தால் மரணம் நிச்சயம் என்பதால் இதை ஓர் உயிர்க்கொல்லி நோய் என்கிறார்கள். 

நோய் வரும் வழி 

இந்த நோய்க் கிருமி ரத்தம், தாய்ப்பால், விந்து மற்றும் பெண் பிறப்புறுப்புத் திரவங்களில் வெளியேறி அடுத்தவர்களுக்கும் பரவுகிறது. கர்ப்பிணிக்கு /தாய்க்கு இந்த நோய் இருந்தால் குழந்தைக்கும் ஏற்படுகிறது. உடலுறவு மூலம் இது மற்றவர்களுக்குப் பரவக்கூடியது. இந்த நோயாளிகள் முன்னெச்சரிக்கையாகப் பரிசோதனை செய்யாமல் ரத்ததானம் செய்யும்போது, அந்த ரத்தத்தைப் பெற்றுக்கொண்டவருக்கு இந்த நோய் வருகிறது. இவர்களுக்குப் போடப்பட்ட ஊசிக்குழலையும் ஊசியையும் சரியாகத் தொற்றுநீக்கம் செய்யாமல், அடுத்தவருக்கு ஊசி போட்டால், அந்தப் புதிய நபருக்கும் இந்த நோய் ஏற்படுகிறது. 

போதை ஊசி போட்டுக்கொள்பவர்கள், ஒரே ஊசியைப் பலரும் பகிர்ந்து கொள்ளும்போதும், தொற்றுநீக்கம் செய்யப்படாத ஊசியைப் பயன்படுத்திப் பச்சை குத்தும்போதும் மற்றவர்களுக்கு இது பரவுகிறது. இந்த நோயுள்ளவர்கள் பயன்படுத்திய சவரக்கத்தி, ரேசர் பிளேடு போன்றவற்றில் சுமார் ஏழு நாட்கள் வரை இந்தக் கிருமிகள் உயிருடன் இருக்கும். அந்த நேரத்தில் அந்தப் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தினால், அவர்களுக்கும் இந்த நோய் வந்துவிடும். 

நோய் பாதிப்பு 

இந்த நோய்த் தொற்று உள்ளவருக்குப் பசி இருக்காது. காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, அதீத களைப்பு போன்ற அறிகுறிகள் உண்டாகும். இவற்றைத் தொடர்ந்து மஞ்சள் காமாலை ஏற்படும். இதனால், கண்களும் தோலும் மஞ்சள் நிறத்தில் காணப்படும். சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போகும். மலம் வெள்ளை நிறத்தில் போகும். வயிறு வலிக்கும். தோல் அரிக்கும். எலும்பு மூட்டுகளிலும் தசைகளிலும் கடுமையான வலி உண்டாகும். இந்த அறிகுறிகள் அனைத்தும் சில வாரங்களில் மறைந்துவிடும். என்றாலும், இந்த நோய் உடலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகக் கடுமையாகி நோய் நீடிக்கும். 

அதேநேரத்தில் இதன் அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரியாது. குறிப்பாக, குழந்தைகளுக்கும், சிறுவர்-சிறுமிகளுக்கும் இந்த நோய் இருப்பதே வெளியில் தெரியாது. அதேவேளையில் தங்களுக்கு நோய் இருப்பதை அறியாமலேயே மற்றவர்களுக்கு இந்த நோயைப் பரப்புவார்கள். ஆதலால், இவர்களை ‘நோய்க் கடத்துநர்கள்’ (Carriers) என்று கூறுகிறார்கள். இவர்களுக்கு நாட்கள் ஆக ஆக கல்லீரல் சுருங்கும் (Liver Cirrhosis). கல்லீரலில் புற்றுநோய் வரும். இறுதியில், மரணம் ஏற்படும். -

தடுப்பூசி வகை 

‘ஹெபடைட்டிஸ் பி’ நோய்க்கு முழு நிவாரணம் தருகிற சிகிச்சை இதுவரை இல்லை. ஆனால், 100 சதவிகிதம் இதை வரவிடாமல் தடுத்துக்கொள்ள ‘ஹெபடைட்டிஸ் பி’ தடுப்பூசி’ உள்ளது, இது தனியாகப் போடப்படும் ஊசியாகவும் (Monovalent hepatitis   B vaccine), பென்டாவேலன்ட் என்னும் கூட்டுத் தடுப்பூசியாகவும் கிடைக்கிறது. பாதுகாப்பு விஷயத்தில் இரண்டுமே ஒன்றுதான். எதை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். இவை கல்லீரல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் சுருக்க நோய் வருவதையும் தடுக்கிறது.

போட்டுக்கொள்ளும் முறை

குழந்தை பிறந்தவுடன் முதல் தவணை, ஒரு மாதத்திலிருந்து 1½ மாதத்திற்குள் இரண்டாம் தவணை, 6 மாதங்கள் முடிந்ததும் மூன்றாம் தவணை என மூன்று தவணைகள் இந்தத் தடுப்பூசியைப் போட வேண்டும். 

குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு…

குழந்தை குறை மாதத்தில் பிறந்து உடல் எடை 2 கிலோவுக்குக் குறைவாக இருந்தால், முதல் தவணைத் தடுப்பூசியை பிறந்தவுடன் போடக்கூடாது. பிறந்த 30ம் நாளில் முதல் தவணையையும், இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகளை வழக்கம்போல போட வேண்டும். 

கர்ப்பிணிக்கு மஞ்சள் காமாலை இருந்தால்?

கர்ப்பிணிக்கு மஞ்சள் காமாலை இருந்தால், பிறக்கப்போகும் குழந்தைக்கு அது பரவிவிடும். இதைத் தடுக்க, குழந்தை பிறந்தவுடன், ‘ஹெபடைட்டிஸ் பி’இமுனோகுலோபுலின் எனும் தடுப்பு மருந்தை அரை மில்லி அளவில் தசை ஊசியாகப் போட வேண்டும். குழந்தை பிறந்தவுடன் போடப்படவில்லை என்றால், அடுத்த 7 நாட்களுக்குள் இதை அவசியம் போட்டுவிட வேண்டும். இத்துடன் வழக்கமான ‘ஹெபடைட்டிஸ் பி’ தடுப்பூசியையும் போட வேண்டும். இந்த இரண்டையும் ஒரே தொடையில் போடக்கூடாது. தனித்தனி தொடைகளில் போட வேண்டும்.

தடுப்பூசியைப் போடவில்லை எனில்..?

ஆரம்பத்திலிருந்தே இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாதவர்கள் எந்த வயதிலும் இதைப் போட்டுக்கொள்ளலாம். மொத்தம் மூன்று முறை இதைப் போட்டுக்கொள்ள வேண்டும். முதல் ஊசிக்கும் இரண்டாம் ஊசிக்கும் ஒரு மாதம் இடைவெளியும், இரண்டாம் ஊசிக்கும் மூன்றாம் ஊசிக்கும் 5 மாதம் இடைவெளியும் விட வேண்டும். 10 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு இதன் அளவு அரை மி.லி. 10 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இதன் அளவு 1 மி.லி. குழந்தைகளுக்குத் தொடையிலும்,
பெரியவர்களுக்கு இடது புஜத்திலும் போட வேண்டும். இடுப்பில் மட்டும் போடவே கூடாது. 

தடுப்பது எப்படி?

ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும்போது தானமாகப் பெறப்படும் ரத்தத்தில் ‘ஹெபடைட்டிஸ் பி’ வைரஸ் கிருமிகள் இல்லை என்றுபரிசோதனையில் உறுதியான பிறகே செலுத்தப்பட வேண்டும்.

தசை ஊசிகள் மற்றும் சிரை ஊசி

களைப் போட்டுக்கொள்ளும்போது ஒருவருக்கு பயன்படுத்தியவற்றை அடுத்தவர்களுக்குப் போடக்கூடாது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஊசிக்குழல்களைப் பயன்படுத்த வேண்டும்.

பிரசவம், அறுவை சிகிச்சை, கருக்கலைப்பு, டயாலிசிஸ் போன்றவை செய்யப்படும்போது மருத்துவக் கருவிகளை நன்றாக தொற்று நீக்கம் செய்ய வேண்டும்.

இந்த நோய் உள்ளவர்களுடன் பாலுறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

இந்த நோயாளிகளைக் கவனிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் ‘ஹெபடைட்டிஸ் பி’ தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

மதுவும் கல்லீரல் நோயும்

மதுப்பழக்கம் உள்ளவர்களுக்குக் கல்லீரல் சீக்கிரத்தில் கெட்டுவிடும். தினமும் 80 மி.லி.க்கு மேல் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இரண்டு வருடங்களுக்குள் கல்லீரல் அழற்சி அடைந்துவிடும். இவர்கள் மதுப்பழக்கத்தைத் தொடர்ந்தால் அடுத்த ஐந்து வருடங்களில் கல்லீரல் சுருங்கிவிடும்.

சிலருக்குப் புற்றுநோயும் வரலாம். எனவே, கல்லீரலுக்குப் பரம எதிரி மது என்பதை உணர்ந்து மது அருந்துவதை உடனே நிறுத்த வேண்டும்....


நன்றி குங்குமம் டாக்டர்
 
நோய் அரங்கம்: டாக்டா் கு.கணேசன் -

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP

Share & Bookmark

×
Facebook
Pinterest
BarraPunto
BlinkList
blogmarks
Connotea
Current
Delicious
Digg
Diigo
Email
Fark
FriendFeed
Google
GooglePlus
HackerNews
Haohao
HealthRanker
Hemidemi
Hyves
LaTafanera
LinkArena
LinkaGoGo
LinkedIn
Linkter
Meneame
MisterWong
Mixx
muti
MyShare
MySpace
Netvibes
NewsVine
Netvouz
NuJIJ
PDF
Ratimarks
Reddit
Scoopeo
Segnalo
StumbleUpon
ThisNext
Tumblr
Twitter
Upnews
Vkontakte
Wykop
Xerpi
SheToldMe
Diggita
Print
Facebook
GooglePlus
LinkedIn
Twitter
Pinterest
Email
Google
Digg
Reddit
Vkontakte
Tumblr
MySpace
Delicious
Print
More...
Facebook
GooglePlus
LinkedIn
Twitter
Pinterest
Email
Google
Digg
Reddit
Vkontakte
Tumblr
MySpace
Delicious
Print
More...

Share & Bookmark

×
Facebook
Pinterest
BarraPunto
BlinkList
blogmarks
Connotea
Current
Delicious
Digg
Diigo
Email
Fark
FriendFeed
Google
GooglePlus
HackerNews
Haohao
HealthRanker
Hemidemi
Hyves
LaTafanera
LinkArena
LinkaGoGo
LinkedIn
Linkter
Meneame
MisterWong
Mixx
muti
MyShare
MySpace
Netvibes
NewsVine
Netvouz
NuJIJ
PDF
Ratimarks
Reddit
Scoopeo
Segnalo
StumbleUpon
ThisNext
Tumblr
Twitter
Upnews
Vkontakte
Wykop
Xerpi
SheToldMe
Diggita
Print
Facebook
GooglePlus
LinkedIn
Twitter
Pinterest
Email
Google
Digg
Reddit
Vkontakte
Tumblr
MySpace
Delicious
Print
More...
Facebook
GooglePlus
LinkedIn
Twitter
Pinterest
Email
Google
Digg
Reddit
Vkontakte
Tumblr
MySpace
Delicious
Print
More...

Share & Bookmark

×
Facebook
Pinterest
BarraPunto
BlinkList
blogmarks
Connotea
Current
Delicious
Digg
Diigo
Email
Fark
FriendFeed
Google
GooglePlus
HackerNews
Haohao
HealthRanker
Hemidemi
Hyves
LaTafanera
LinkArena
LinkaGoGo
LinkedIn
Linkter
Meneame
MisterWong
Mixx
muti
MyShare
MySpace
Netvibes
NewsVine
Netvouz
NuJIJ
PDF
Ratimarks
Reddit
Scoopeo
Segnalo
StumbleUpon
ThisNext
Tumblr
Twitter
Upnews
Vkontakte
Wykop
Xerpi
SheToldMe
Diggita
Print